நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 30 நிமிட கேள்வி நேரத்துக்கு அனுமதி

3 September 2020, 11:27 pm
Quick Share

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 30 நிமிடங்களுக்கு மட்டும் கேள்வி நேரம் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் காரணாமாக நடப்பாண்டு கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.இதனிடையே, நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டத்தொடர் நடைபெறும் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது. ஜீரோ ஹவர் அரை மணி நேரம் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம், ஜீரோ ஹவர் குறித்த மத்திய அரசின் அறிவிப்புகளால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. இந்த நிலையில், தொகுதி சார்ந்த முக்கிய கேள்விகளை எழுப்ப உறுப்பினர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஒன்றான கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்விநேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இன்று அறிவிப்பு வெளியானது. கேள்வி நேரத்திற்கு 30 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விகள் மட்டும் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 4

0

0