‘நெகட்டிவ் பப்ளிசிட்டி தான்…இருந்தாலும் நல்லாருக்கு’: ரிஸ்க் எடுத்த அமேசான், கேட்பரி…குவியும் பாராட்டுகள்.!!

Author: Aarthi Sivakumar
26 October 2021, 6:29 pm
Quick Share

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள அமேசான் மற்றும் கேட்பரி டைரி மில்க்-ன் விளம்பரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பெரும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து தங்களது நிறுவன உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து லாபம் காண்பதிலேயே குறியாக இருப்பது வழக்கம். அந்த வகையில் தீபாவளி நெருங்கும் சமயத்தில் பல நிறுவனங்கள் வித்தியாசமாக முறையில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த நடைமுறையில் இருந்து சற்று மாறுபட்டு நெகடிவ் பப்ளிசிட்டியாக இருந்தாலும், நல்ல விஷயமொன்றை Amazon மற்றும் cadbury dairy milk விளம்பரப்படுத்தி வருகிறது.

Amazon ப்ரைம் விளம்பரத்தில் மிர்சாபூர் இணைய தொடர் பிரபலமான கலீன் பையா நடித்துள்ளார். அந்த வீடியோ, தீபாவளி அன்று ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் உள்ள படங்களை பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது. எந்த நிறுவனமும் செய்ய யோசிக்கும் விஷயத்தை அமேசான் பிரைம் நிறுவனம் செய்துள்ளது. அந்த வீடியோவில்,

நாளை அமேசான் பிரைம் நம்முடன் தான் இருக்கப்போகிறது. நாம் அதை பின்பு கூட பார்த்துக்கொள்ளலாம். ஆனால் தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது. ஆகவே அன்றைய நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவன விளம்பரத்தின் மூலம் லாபம் ஈட்டும் குறிக்கோளிலுடன் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்தியில் வித்தியாசமான இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இது ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி’ என்றாலும் கூட அமேசானின் இந்த முயற்சிக்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல, கேட்பரி டைரி மில்க் விளம்பரமும் கவனம் ஈர்த்துள்ளது. இது (Not Just A Cadbury Ad) கேட்பரி விளம்பரம் மட்டும் அல்ல என தொடங்கும் அந்த வீடியோவில் ‘தீபாவளிக்கு உள்ளூர் கடைகளில் பொருடங்களை வாங்குங்கள்’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பெரும் நஷ்டங்களை சந்தித்த இந்தியாவில் உள்ள உள்ளூர் கடைகளுக்கு கேட்பரி நிறுவனம் உதவ விரும்புகிறது என்பதை, அதன் சமூக ஊடக சேனல்கள் முழுவதும் தொடர்ச்சியான வீடியோக்கள் மூலம் அது விளக்குகிறது. இந்த வீடியோவும் மக்களிடையே நல்ல நேர்மறையாக வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 486

0

0