அமமுகவின் 4வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஆர்கே நகரில் காளிதாஸ் போட்டி..!!!

Author: Babu Lakshmanan
15 March 2021, 11:47 am
Quick Share

சென்னை : அமமுக சார்பில் போட்டியிடும் 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதால், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட விஷயங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாகியுள்ளன.

அதிமுக, திமுக, கமல்ஹாசன் கூட்டணி, சீமான் ஆகியோருடன் டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தே.மு.தி.க.வுக்கு கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே, அமமுக கட்சியின் தரப்பில் 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில், டி.டி.வி. தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

இந்த அமமுக சார்பில் போட்டியிடும் 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் டாக்டர் காளிதாஸ் போட்டியிடுகிறார்.

Views: - 232

0

0