அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்…!!

Author: Aarthi
14 October 2020, 8:25 am
vetrivel - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக பொறுப்பு வகித்து வருபவர் வெற்றிவேல். அவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில்,

அ.ம.மு.க. நிர்வாகி வெற்றிவேலுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 52

0

0