கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

Author: Babu
15 October 2020, 7:10 pm
ammk vettrivel - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்த வெற்றிவேலுக்கு, கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவரது உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். கொரோனா தொற்றிற்கு மேலும் ஒரு அரசியல் தலைவர் உயிரிழந்திருப்பது தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அப்போது, ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற தினகரன் தலைமையில் தொடங்கப்பட்ட அமமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அக்கட்சியின் அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 47

0

0