6 மாதங்களுக்கு பிறகு ஆனைமலை புலிகள் காப்பகம் திறப்பு: டாப்சிலிப் செல்லவும் ‘நோ’ தடை…குஷியில் சுற்றுலா பயணிகள்..!!

Author: Aarthi Sivakumar
2 September 2021, 9:27 am
Quick Share

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் சுற்றுலா பபகுதிக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இடைக்கால தடையை வனத்துறையினர் விதித்திருந்தனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரனா வைரஸ் தொற்று குறைந்த உள்ள நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஆணை பிறப்பித்து நடைமுறையில் உள்ளது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலாத்தலங்கள், குரங்குநீர் வீழ்ச்சி தடை அமலில் இருந்து வந்தது. இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் ஒப்புதலோடு மேற்குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் வால்பாறை செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி செல்லக் கூடாது.

மது மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என்றும் டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் டிரக்கிங் செல்லவும், யானை சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதிகுள் சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க 30 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி வனச்சரக புகழேந்தி தகவல் தெரிவித்தார்.

Views: - 416

0

0