தொகுதிகள் குறைந்தாலும் பலம் குறையவில்லை… மீண்டும் முதலமைச்சராவார் பழனிசாமி : அன்புமணி அதிரடி பேட்டி..!!

27 February 2021, 7:16 pm
admk - pmk - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகள் குறைத்து பெற்றிருப்பதற்கான காரணத்தை பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் அதிமுக – பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதியானது. இதையடுத்து, சென்னையில் இன்று இரு கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. மேலும், அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :- வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனாலும், இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியின் எண்ணிக்கையை நாங்கள் குறைத்து பெற்றிருக்கிறோம். இதற்கு முக்கியக் காரணம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்யப்பட்டதுதான். ஆனால், எங்களுடைய பலம் குறையப் போவது கிடையாது. எங்களுடைய கூட்டணி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்.

மாற்றம், முன்னேற்றம் அன்புமணி கைவிடப்பட்டதா என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் மருத்துவர் ஐயா அவர்கள் 40 ஆண்டு காலம் போராடி, பலமுறை சிறைக்கு சென்று, போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் செய்து, அரசாங்கங்களுக்கு கோரிக்கை வைத்து, இன்று மருத்துவரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

40 ஆண்டுகால போராட்டத்திற்கு முதற்கட்டமாக ஒரு முடிவு வந்திருக்கிறது. அதனால், இந்தத் தேர்தலில் எங்களின் எண்ணிக்கையை குறைத்து பெற்றிருக்கிறோம். நாங்கள் மிகப்பெரிய பெற்றியை பெறுவோம், எனக் கூறினார்.

Views: - 21

0

0