ரூ.4,200 கோடியில் நிவாரணம்… ரூ.5000 கோடி வருமானம்.. அரசின் தில்லுமுல்லுவைக் கண்டிக்கும் அன்புமணி..!!!

Author: Babu Lakshmanan
15 June 2021, 1:06 pm
Anbumani 02 updatenews360
Quick Share

சென்னை ; தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸும், மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா நிவாரணம் கொடுத்து விட்டு, அதனை டாஸ்மாக் வழியில் பறித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று தமிழக அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்!

கொரோனா நிதியுதவியாக ரூ.4200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. ஆனால், தினசரி 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும் வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு, என தெரிவித்துள்ளார்.

Views: - 179

0

0