நீட் தேர்வை திணித்த காங்கிரஸே தவறை உணர்ந்து விட்டது… நாடு முழுவதும் எதிர்ப்பு அலை ஆரம்பம் : அன்புமணி ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
22 September 2021, 12:48 pm
Anbumani 02 updatenews360
Quick Share

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் அலை வீசத் தொடங்கி விட்டதாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “நீட் சமூகநீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும் அதிலிருந்து மராட்டியத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி

இந்தியாவில் நீட் தேர்வை திணித்த காங்கிரஸ் கட்சியினரே அதன் தீமைகளை உணரத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்து நல்ல திருப்பம். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான அலை வீசத் தொடங்கப் போகிறது என்பதையே மராட்டியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காட்டுகிறது

நீட் மிகப்பெரிய சமூக அநீதி… அது ஒரு மாணவர்கொல்லி என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த உண்மையை மத்திய அரசு உணர வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட எந்தெந்த மாநிலங்கள் நீட் விலக்கு கோருகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு அதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 153

0

0