தமிழகத்திற்கு பாஜகதான் இனி எதிர்காலம்… நீட் குறித்து மக்களிடம் எடுத்துச்செல்வோம் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சூளுரை

16 July 2021, 5:22 pm
bjp annamalai - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்திற்கு பாஜகதான் இனி எதிர்காலமாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்றுக் கண்டார். இந்த நிகழ்வின் போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக மேலிடப் பொறுப்பாளர் ரவி உள்பட பல்வேறு இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ஆட்சிக்கு வந்து 70 நாட்களாகியும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறியதையும் அவர்கள் செய்யவில்லை. கிராமப்புற மாணவர்களுக்கு நீட் ஒரு வரப்பிரசாதம். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மருத்துவக் கனவு நிறைவேற நீட் ஒரு நல்ல வாய்ப்பளிக்கிறது.

மாநில பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகளே நீட் தேர்வில் கேட்கப்படுகிறது. அப்படியிருந்தும் திமுக அதனை ஏன் எதிர்க்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், நீட் தேர்வு நல்லது. இது தொடர்பாக வீதி வீதியாக சென்று மக்களிடம் கொண்டு செல்வோம்.

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு சிறப்பாக செலுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 66 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் தயக்கம் காரணமாக தடுப்பூசிக்கு வரவேற்பில்லாமல் இருந்தது. ஆனால், தற்போது பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஊடகங்கள் பற்றிய எனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பற்றியே அவ்வாறு கூறினேன். ஊடகங்களுக்கு முறையான அமைப்பு இருப்பது எனக்கு நன்கு தெரியும்.

கடந்த ஓராண்டாக கட்சிக்காக உழைத்த எனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் இனி பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தி எதிர்காலம் இனி பாஜகதான், எனக் கூறினார்.

Views: - 158

1

0

Leave a Reply