வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானமா..? அதிரடி ஸ்டெப்பை எடுக்கும் அண்ணாமலை… மிரளும் கட்சிகள்!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 2:34 pm
Quick Share

சென்னை : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அண்மையில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேரவையை வெளிநடப்பு செய்தன. மேலும், தமிழக அரசின் இந்த செயலைக் கண்டிக்கும் விதமாக, பாஜக ஆலோசனை நடத்தி வந்தது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே மூப்பனாரின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பள்ளிகளை திறப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை. அரசியலில் நேர்மை என்பதே இல்லை. ஆனால் நேர்மையான அரசியலை முன்னெடுக்க மூப்பனார் நினைவிடத்தில் உறுதி ஏற்போம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாஜக விவசாய பிரிவு ஈடுபடும். தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.வேளாண் சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட தீர்மானம் வெறும் கண்துடைப்பு நாடகம்.

வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி பேசிய முதல்வர் ஸ்டாலினின் பேச்சில் திராணி இல்லை. 3 வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், எனக் கூறினார்.

Views: - 263

1

0