முதலமைச்சர் ஸ்டாலினையும் கூண்டில் ஏற்றுவேன்… விட மாட்டேன்… அனைத்தையும் சந்திக்க தயார்.. அண்ணாமலை அதிரடி

Author: Babu Lakshmanan
16 June 2022, 1:37 pm
Quick Share

62 ஆயிரம் கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்டம் இளைஞரணி சார்பில் அண்ணாமலை அவர்களுக்கு வெற்றிக்கான கடாயுதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் தமிழக மாநில பாஜக தலைவர் பேசியதாவது :- 1068 குழந்தைகளை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக கொண்டு வந்தவர். பாரத பிரதமர் மோடி. இலங்கை தமிழகர்கள் ஒருவர் கூட இன்றைக்கு இலங்கை சிறையில் இல்லாததற்கு இன்றைக்கு மோடி அரசும், வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரனுக்கு;k நன்றியை தெரிவிக்க வேண்டும்.

சினிமா மாடல் போன்று நடித்து வருவதால் திமுக மாடல் என்று கூறி வருகின்றனர். குற்றவாளிகள் தமிழகத்தில் வெளிப்படையாக குற்றம் செய்ய வெளி வருகின்றனர். முதல்வர் காவல்துறைக்கு சென்றதால் இன்றைக்கு குற்றம் நடைபெறுகிறது. கூட்டுபாலியல் அதிகம். வழிப்பறி, கொள்ளை, கொலை அதிகரித்து உள்ளது.

மதுரை அமைச்சர் மூர்த்தி இன்று புதிதாக செய்து வருகிறார். அதிகாரிகளை மாற்றுவது, மீண்டும் அதே அதிகாரியை வேறு ஒரு பத்திர பதிவு அலுவலகத்திற்கு மாற்றி வருகிறார். தூத்துக்குடியில் இன்றைக்கு விவசாயிகளின் நிலத்தை அபகரித்துள்ளார். மே 31ஆம் தேதி 9600 கோடியை GST தொகையை கொடுத்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகையை கூறிவருகிறார்.

பெட்ரோல் விலையை 5 குறைக்கிறீங்க. டீசல் விலையை ஒரு ரூபாய் கூட குறைக்க வில்லை. 6 மாதத்தில் எந்தவித வாகுறுதியும் கொடுக்காமல் இன்றைக்கு 14 ரூபாய் விலையை குறைத்துள்ளது. டீசலுக்கு 15 ரூபாய் வரை குறைத்துள்ளது மத்திய அரசு. இன்றைக்கு PTR புதிது புதிதாக பேசுவார். இன்றைக்கு குடும்ப தலைவிக்கு வெகு விரைவில் 1000 ரூபாய் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார். அதை கூறிய அவர் குடும்ப தலைவிகள் யார் என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கொடுக்கப்படும், என்றார்.

மத்திய அரசு 22 குழுவாக உருவாக்கி அந்த ஒரு குழுவிற்கு அமைச்சர் PTR தலைவராக போட்டு தமிழக இல்லத்தரசிகளுக்கு 1000 வரவேண்டும். ஸ்காட்லாண்டில் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அங்குள்ள கடலின் காற்றாலை செயல்படும் திட்டத்தை போல, தமிழ்நாட்டிலும் மின்சாரதுறைக்கு காற்றாலை போட திட்டம். அதை வரவேற்கிறேன்.

இதுவரை என் மீது 620 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு தொடுத்துள்ளனர். மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி அதிமுகவில் அவர் இருந்த போது அவதூறு பேசியவர் தற்போதை முதல்வர் முக ஸ்டாலின். அந்த ஆதாரத்தை எடுத்துச் செல்வேன். முதலமைச்சரையும், என்னோடு கூண்டில் ஏற்றுவேன். 2024 ஆம் ஆண்டு 400 எம்.பிக்கள் ஆதரவுடன், 3வது முறையாக ஆட்சி அமைப்போம். அதில் 25 எம்பிக்கள் தமிழ்நாட்டின் இருந்து செல்ல வேண்டும்.

அதிமுக ஆட்சியில் லாக் அப் மரணத்திற்கு எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் சென்று காவல் நிலையத்தை முற்றுகையீடுவது வழக்கம். திமுக அமைச்சர் சேகர் பாபு, என்றைக்கு ஆதினம் பற்றி தவறாக பேசினாரோ அன்றைக்கே சொலி முடிந்தது. ஆதினம் பேசியது என்ன தவறு. தமிழகத்திற்கு தெரிந்த உண்மையை தான் ஆதினம் கூறினார். சாமி மீது கண்ணில்லை பின்னால் வரும் உண்டியல் மீதி தான் திமுகவினருக்கு கண். ஆதினம் மீதி நீங்கள் தொட்டு பாருங்கள். மதுரை மக்கள் உங்களை என்ன செய்வார்கள்.? மோடி என்ன செய்வார்கள் என்று பாருங்கள், எனக் கூறினார்.

Views: - 576

0

0