ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு…கடைகளுக்கு இனி நேரக்கட்டுப்பாடு இல்லை: தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி..!!

Author: Aarthi Sivakumar
23 October 2021, 7:50 pm
Quick Share

சென்னை: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகை கடைகள், மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை மதுக்கூடங்களுக்கும்(பார்கள்) அனுமதி

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்படும்

கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி, விளையாட்டு அரங்குகளில் பயிற்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 174

0

0