தீவிரமடையும் நிவர் புயல் : 2வது நாளாக நாளையும் 27 ரயில்களின் சேவை ரத்து!!

25 November 2020, 2:26 pm
Special Trains Reservation - Updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனால், பாதிப்புள்ள மாவட்டங்களில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால், நிவர் புயல் இன்று நள்ளிரவில் தான் கரையை கடக்கும் என்பதால், நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்-மதுரை, மதுரை-எழும்பூர், எழும்பூர்-காரைக்குடி, எழும்பூர்-செங்கோட்டை, திருநெல்வேலி-செங்கோட்டை, தூத்துக்குடி-எழும்பூர், எழும்பூர்-கன்னியாகுமரி, எழும்பூர்-கொல்லம், ராமேஸ்வரம் -சென்னை, மதுரை-சென்னை (06101, 06102), எழும்பூர்-திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Views: - 17

0

0