வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேலும் ஒரு மாநிலத்தில் தீர்மானம் : அதுவும் காங்., ஆட்சி அல்லாத மாநிலம்..!!
28 January 2021, 7:44 pmமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சி அல்லாத மாநிலம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இதன் சான்றாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதைப்போல, கேரளாவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதனை மத்திய அரசு பொருட்படுத்திக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் மேற்கு வங்க அரசும் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை தாக்கல் செய்தது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், மம்தா அரசுக்கு போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
0
0