நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை : 4 நாட்களில் 3 மாணவர்கள் பலியான சோகம்!!

By: Udayachandran
15 September 2021, 12:34 pm
Neet Exam Suicide -Updatenews360
Quick Share

வேலூர் : காட்பாடி அருகே நீட் தேர்வி எழுதிய மாணவி தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழி தம்பதியான திருநாவுக்கரசு ருக்மணியின் மகள் சவுந்தர்யா. 17 வயதாகும் இவர் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றார்.

சவுந்தர்யா தேர்வை சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் தோல்வியடைந்து விடுவோம் என்ற விரக்தியில் இருந்த சவுந்தர்யா, வீட்டில் யாரும் இல்லாத போது புடவையின் மூலம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலை அறிந்து காட்பாடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு நடந்த நாள் முதல் இன்று வரை கிட்டதட்ட 4 நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் தனுஷ் என்ற மாணவன் தேர்வை எழுதும் முன்பே தற்கொலை செய்தார்.

இதே போல அரியலூரில் மாணவி கனிமொழி, தற்போது சவுந்தர்யா என பட்டியல் தொடர்ந்து கொண்டே போகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிய தமிழக அரசு, சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் வலுத்து வந்தாலும், தமிழகத்தில் தொடரும் நீட் மரணத்திற்கு முற்றுபுள்ளி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

Views: - 147

0

0