பெண் எம்பிக்கள் கவர்ச்சி பொருட்களா? சசிதரூர் கிளப்பிய சர்ச்சை : தலைகுனிந்த காங்கிரஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 2:09 pm
Sasi tharror Controversey - Updatenews360
Quick Share

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம், நாடாளுமன்ற தொகுதி எம்பியான சசிதரூர், அன்றாட நாட்டு நடப்புகளை டுவிட்டரில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டவர். அதில் தன்னைப் பற்றிய செய்திகளையும் அவர், அதிக அளவில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அப்படி அவர், டுவிட்டரில் படத்துடன் கூடிய கமெண்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சசிதரூர் கிளப்பிய சர்ச்சை

முன்னாள் மத்திய அமைச்சரான 65 வயது சசிதரூர் அப்படி என்னதான் செய்தார்?… நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் முதல் நாளில் 6 பெண் எம்.பிக்களுடன் உற்சாகத்துடன் எடுத்த செல்பி புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு இருந்தார். அந்த படத்தில் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரவர்த்தி மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தென் சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் சிரித்தவாறு நின்ற காட்சி இடம் பெற்று இருந்தது.

Thesaurus' Tharoor shows why he's such a charmer

மக்களவை கவர்ச்சிக்கரமான இடம்

சசிதரூர் அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த படக் குறிப்பில் தெரிவித்த கருத்துதான் சர்ச்சைக்குரியதாக அமைந்து விட்டது. “பணி செய்வதற்கு மக்களவை கவர்ச்சிகரமான இடமல்ல என்று யார் சொன்னது?… இன்று காலை எனது ஆறு சக எம்.பி.க்களுடன்” என சசிதரூர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

எம்பி ஜோதிமணி பதிவு

இந்தப் படத்தை ட்விட்டர் தனது பக்கத்தில் பகிர்ந்த ஜோதிமணி “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள். தோழமையோடு ஒரு மகிழ்ச்சியான தருணம்” என்று தெரிவித்திருந்தார். இதேபோல் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தை பதிவிட்டு, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் சக தோழமைகளுடன் என்று குறிப்பிட்டிருந்தார்.

சுப்ரியா சுலேவும், மிமி சக்ரவர்த்தியும் சசிதரூரின் கமெண்ட்டுடன், அதை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்விட் செய்திருந்தனர்.

சசிதரூர் பதிவுக்கு குவியும் கண்டனம்

இதைத்தொடர்ந்து சர்ச்சை வெடித்தது. சசி தரூரின் கமெண்ட் பாலியல் ரீதியாக பெண்களை தாக்குதலுக்கு உள்ளாக்கும் ஒரு செயல் என்று பலரும் கடுமையாக விமர்சித்து உள்ளனர். குறிப்பாக கவர்ச்சிகரமான எனக் கூறியதற்கு பெண்ணியவாதிகளும் மகளிர் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Par Panel on IT chaired by Tharoor may call Facebook whistleblowers to  India - The Financial Express

“நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகள் என்பவர்கள் பணியிடத்தை “கவர்ச்சிகரமானதாக” மாற்றுவதற்கான அலங்காரப் பொருட்கள் அல்ல. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நீங்கள் அவமரியாதையாகவும், பாலியல் ரீதியாகவும் நடந்து கொள்கிறீர்கள்’’ என அவர்கள் சசிதரூரை போட்டு தாக்கினர்.

நாடாளுமன்றம் அவமதிப்பு

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, “நாடாளுமன்றம் மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை கவர்ந்திழுக்கும் பொருளாக மாற்றுவதன் மூலம் நீங்கள் அவர்களை அவமதிக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் இப்படி பெண்களை அவமதிப்பு செய்வதை உடனே நிறுத்துங்கள்” என்று கண்டித்து இருக்கிறார்.

Winter Session 2021: Here are the key Bills set to be tabled in Parliament  | India News,The Indian Express

காங்., கலாச்சாரத்தில் சசி : வானதி

பாஜக மகளிரணியின் தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறும்போது,
“தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, பெண்களை காட்சிப் பொருளாக கூறுவது அதுவும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே சொல்வது மிகவும் கீழ்த்தரமானது.இதுவரை இல்லாத ஒன்று சசிதரூரின் பாலியல் ரீதியான கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் காங்கிரஸ் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என்று நறுக் கொட்டு வைத்தார்.

Coimbatore BJP MLA Vanathi Srinivasan writes to Centre to tackle Covid  crisis in the district - DTNext.in

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை அவர்களின், தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்து பாலியல் சமத்துவம் குறித்து உபதேசம் செய்வது, சசிதரூருக்கு அழகல்ல. இது பெண் எம்பிக்களின் கண்ணியத்தை குறைக்கும் செயல். தனது செயலுக்காக அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட்டின் பிரபல பெண் வக்கீல் கருணா கண்டனம் தெரிவித்தார்.

சசிதரூரின் மூன்று திருமணங்கள்

நெட்டிசன்களும் சசிதரூரை செமையாக வறுத்து எடுத்து விட்டனர். “உங்களுடைய விஷம செயற்பாடுகளால் மற்றவர்களையும் விஷமிகள் ஆக்கிவிடாதீர்கள்” என்று ஒருவரும் “சசி தரூர் மூன்று தோல்விகளுக்கு பிறகும் தன்னை ஒரு ப்ளேபாய் ஆக கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை” என்று இன்னொருவரும் கேலியாக விமர்சித்திருக்கிறார்.

Congress MP Shashi Tharoor spent 3 nights in Dubai with Pak journalist,  prosecutor tells court

அதாவது, சசிதரூர் மூன்று திருமணங்கள் செய்தவர் என்பதை அந்த நெட்டிசன் நாசூக்காக கிண்டல் செய்து உள்ளார்.

சரண்டரான சசிதரூர்

இப்படி நாலா பக்கமும் அடிமேல் அடி வாங்கிய சசிதரூர், கடைசியில் பணிந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அடுத்த ட்வீட்டில் “முழு செல்பி விஷயமும் பெண் எம்.பி.க்களின் முயற்சியில் நல்ல நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டது. மேலும் அதே உணர்வில் அதை ட்வீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள். இதனால் சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன்.
இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்குமேல் எதுவும் இல்லை. அவ்வளவுதான்’’ எனக் கூறியிருக்கிறார்.

Shashi Tharoor Admits Mistake, Says Sorry for Slamming PM Modi's Bangladesh  Speech

சசிதரூர் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும், அவரை கேள்விக் கணைகளால் பெண்ணியவாதிகள் துளைத்து எடுத்து வருகின்றனர். அவர்கள் கூறும்போது, “இந்த செல்பியை, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமி சக்கரவர்த்தி எடுத்திருக்கிறார். சசிதரூர் எடுக்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். 6 பெண் எம்பிக்களுடன் சசிதரூர் செல்பி எடுத்துக் கொண்டதை யாரும் குறை கூறவில்லை. அதை டுவிட்டரில் பதிவு செய்வதும், பதிவு செய்யாமல் போவதும் அவர்களுடைய தனிப்பட்ட உரிமை, விருப்பம். ஆனால் சசி தரூர் அந்தப்படம் குறித்து தெரிவித்த கருத்துதான், பெண்களைப் பற்றி அவர் கொண்டிருக்கும் தவறான சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மிகவும் புண்படுத்துவதாக உள்ளது.

கவர்ச்சியால் சிக்கிய சசிதரூர்

நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லாம் ஒன்றாக பணி செய்கிறோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தால் அதை பாராட்டி இருக்கலாம். ஆனால் கவர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் சொல்வதைப் பார்த்தால் பெண்கள் எல்லோருமே தேர்தல் அரசியலில் கவர்ச்சி மூலம்தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது.

Shashi Tharoor birthday: 10 words from Tharoorian English we bet you didn't  know!

தனது கருத்து பற்றி வருத்தம் தெரிவிக்கும் முன்பே, பணியிட தோழமை என்று சசிதரூர் குறிப்பிட்டிருந்தால் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் ஏன் இப்படி பெண்களை அவமதிக்கிறீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்ட பிறகே, அவரிடம் இருந்து முறையான பதில் வருகிறது. இல்லையென்றால் அவர் பதில் சொல்லியே இருக்க மாட்டார் போல் தெரிகிறது.

நாட்டில் பாலியல் ரீதியான எந்தவொரு பிரச்சினை என்றாலும், உடனடியாக கொந்தளித்து குரல் கொடுக்கும் ஜோதிமணி எம்பி கூட இதை ஏன் கண்டிக்கவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. ஒரு வேளை சசிதரூர் தனது கட்சியை சேர்ந்த எம்பி என்பதால் கண்டிக்காமல் விட்டுவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சசிதரூரின் செயல் அநாகரீகமானது

மக்கள் பிரதிநிதிகள், பேசும் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். வார்த்தைகளை அளந்தும், அறிந்தும் பேசவேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்போது அழகானவர் என்று ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவது, நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இதுவும் கண்டிக்கத்தக்க ஒன்று “என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

அரசியல் விமர்சகர்களும் “சசிதரூரின் செயல் அநாகரீகமானது. ஏற்கனவே அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், சசி தரூர் மிகவும் கவனமாக கருத்து தெரிவித்து இருக்க வேண்டும். பெண் எம்பிக்கள் மீதான அவருடைய பார்வையால், நாடாளுமன்ற கூட்டத்தில் நடந்த அமளி அப்படியே நீர்த்துப் போய்விட்டது. இதனால் காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது. நத்தை வேகத்தில் நகர்ந்து வந்த காங்கிரஸ் என்ற வாகனத்தின் டயரை பஞ்சர் செய்வதுபோல் சசிதரூரின் கருத்து அமைந்துவிட்டது. இனியாவது அவர் கவனத்துடன் பேச வேண்டும்” என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

Views: - 267

0

0