திருமா., சீமானையும் உடனே கைது செய்யுங்க… அந்த ரெண்டு கட்சிகளையும் தடை பண்ணுங்க ; டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கும் அர்ஜுன் சம்பத்..!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 9:19 pm
Quick Share

டெல்லி : சீமான் மற்றும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார் 10 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளுடன், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மத்திய அரசு இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய பிறகும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அந்த இயக்கத்தை ஆதரித்து பேசி வருகின்றனர். ஏற்கனவே, சீமான் யாசிக் மாலிக்கை தமிழகம் அழைத்து வந்து தனித்தமிழ்நாடு கோரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தடை செய்யும் நோக்கில் பூவுலகின் நண்பர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்க உள்ளோம், என்றார்.

Views: - 361

0

0