ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களின் விற்பனைக்கு தடை : மத்திய அரசு அதிரடி.!!

24 October 2020, 4:05 pm
army canteen - updatenews360
Quick Share

நாடு முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பிணயம் வைத்து பணிபுரிந்து வரும் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்காகவும் நாடு முழுவதும் ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அனைத்து மளிகைப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டுப் பொருட்களை இனி நேரடியாக கொள்முதல் செய்யக்கூடாது என்றும், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமரின் முடிவிற்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 14

0

0