என்னோட பையன் வெளியே வர்ர வரைக்கும் இதெல்லாம் வேணாம்… ஷாருக்கான் வீட்டில் போடப்பட்ட தடாலடி உத்தரவு!!!

Author: Babu Lakshmanan
19 October 2021, 7:03 pm
shah rukh khan family - updatenews360
Quick Share

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கான் வீட்டில் ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.

Aryan Khan In Trouble -Updatenews360

இதையடுத்து, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன்கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதேவேளையில், போலீசாரும் 14 நாட்கள் காவலில் எடுத்து ஆர்யன்கானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர், சிறையில் உணவுகளை உண்ண மறுத்து வருவதாகவும், வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதனைக் கேள்விப்பட்ட தந்தை ஷாருக்கான் மற்றும் தாயார் கவுரி மனமுடைந்து போயுள்ளனராம். கேண்டினில் உணவு வாங்கி சாப்பிட ரூ.4,500ஐ மணி ஆர்டர் செய்துள்ளாராம் ஷாருக்கான். மேலும், மகனின் நிலையை எண்ணி உடைந்து போன கவுரி, எந்நேரமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஆர்யன்கான் சிறையில் இருந்து வெளியே வரும் வரையில், வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு உத்தரவை அவரது தாயார் கவுரி போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆர்யன்கான் வரும் வரையில் வீட்டில் எந்த இனிப்பு வகைகளும் செய்யக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லியுள்ளாராம். மீறி ஏதேனும் செய்தால் கூட அதனை தடுத்து விடுகிறாராம்.

மகனின் நிலைமை எண்ணி வாடி வரும் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி, சிறைக்கதவு எப்போது திறக்கும் என்பதை எதிர்நோக்கியுள்ளனர்.

Views: - 224

1

0