சந்தர்ப்பவாத திமுகவிடமிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டும்..! அசாதுதீன் ஒவைசி அதிரடி..!

26 March 2021, 8:35 pm
Asaduddin_Owaisi_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் திமுகவிடமிருந்து, தமிழ்நாட்டைக் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அசாதுதீன் ஒவைசி, “இஸ்லாமிய சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக அமமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதோடு, அதன் தலைவர் தினகரனும் உறுதியளித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் வாடும் 41 இஸ்லாமியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதோடு, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி அறிக்கைகளையும் செயப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

அமமுக தலைமையிலான இந்த அணி தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும். ஏஐஎம்ஐஎம் கட்சி தினகரனுக்கு உறுதுணையாக செயல்படும். பாஜக கூட்டணியால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத மோடி அரசுக்கு அதிமுக எப்படி ஆதரவு கொடுக்கிறது? இதே போல் திமுகவும் சந்தர்ப்பவாத அரசியல் தான் செய்கிறது.

வரவுள்ள தேர்தலில் இரு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். தமிழகத்தை வளர்ச்சியடையச் செய்ய தினகரனால் மட்டுமே முடியும். தமிழ்நாட்டில் பாஜகவை வீழ்த்த திமுக மட்டும் தான் பேச வேண்டுமா? நாங்களும் பாஜகவை வீழ்த்தவே விரும்புகிறோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.

தங்களை மதச்சார்பற்றவர்கள் எனக் கூறிக்கொள்ளும் யாரும் உண்மையில் அப்படி இல்லை. பாசிச சக்திகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற மூன்றாவது அணி அவசியம். திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற எங்களுக்கு வரலாற்று வெற்றியை அளிக்க வேண்டும்.” எனக் கூறினார்.

Views: - 9

0

0