சட்டப்பேரவையில் இன்று திறக்கப்படும் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் இதுதானா..? பாராட்டும் தொண்டர்கள்!!!
Author: Babu Lakshmanan2 August 2021, 12:21 pm
சென்னை : சட்டப்பேரவையில் இன்று திறக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தில் இடம்பெறும் வாசகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதன்முதலில் 1921-ம் ஆண்டு மேலவை என்று சொல்லப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்ட நூற்றாண்டை கொண்டாடும் வகையில், தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவும், சட்டசபை அரங்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் இன்று நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.
சட்டசபை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறந்து வைக்கிறார். ஏற்கனவே 15 தலைவர்களின் புகைப்படங்கள் உள்ள நிலையில், 16-வதாக கருணாநிதியின் புகைப்படமும் இடம்பெறுகிறது.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதியின் செயல்பாட்டை விளக்கும் வகையில், ‘காலம் பொன் போன்றது… கடமை கண் போன்றது’ என்ற வாசகம் அவரது படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
0
0