தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அதிமுக புறக்கணிப்பு…!!

Author: Aarthi Sivakumar
19 August 2021, 9:00 am
Quick Share

சென்னை: தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை நாளை(19.08.21) புறக்கணிப்போம் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த போராட்டத்திற்கு பின் நேற்று அவர் அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை தி.மு.க. அரசு கையில் எடுத்துள்ளது.

latest tamil news

இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில் பழனிசாமி சட்டசபையில் குரல் கொடுத்தார். அதற்கு உரிய வாய்ப்பு தராமல் என்ன சொல்கிறார் என்பதை கேட்காமலேயே அடுத்த நடவடிக்கைகளை எடுத்து விட்டனர். பொய் வழக்கு போட்டு எங்களை அச்சுறுத்தி அ.தி.மு.க.வை நசுக்க வேண்டும் என தி.மு.க. அரசு செயல்படுகிறது.

எந்த வழக்குகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை அ.தி.மு.க. நாளை முழுமையாக புறக்கணிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணிக்க உள்ளது.

Views: - 338

0

0