அ.ம.மு.க.வினருக்கு ஓகே… அ.ம.மு.க.விற்கு தடா..! அ.தி.மு.க.வின் திட்டம் என்ன..?

11 September 2020, 6:30 pm
edapad-palanisamy-dinakaran - updatenews360
Quick Share

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அ.தி.மு.க. இரு அணிகளாக உடைந்தது. பின்னர், கட்சியின் நலன் கருதி, மேற்கொள்ளப்பட்ட சில சீர்திருத்தங்களினால் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற தினகரன், தனது ஆதரவாளர்களுடன் அ.ம.மு.க.வை தோற்றுவித்தார்.

ஆனால், கட்சியில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும், எதிர்கால திட்டங்களும் இல்லாததால், அதிருப்தியடைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.விற்கு திரும்பி வந்த வண்ணம் இருந்து வருகின்றனர். அதேவேளையில், அ.தி.மு.க.வில் இருந்து அ.ம.மு.க.விற்கு சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்க தயாராக இருப்பதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.

இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, விடுதலையான பிறகு, அ.தி.மு.க., அ.ம.மு.க. மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி போடுமா..? என அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ” அ.தி.மு.க. – அ.ம.மு.க. இடையே கூட்டணிக்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது,” எனக் கூறினார்.

ஆக, மொத்தம் அ.தி.மு.க.விற்கு வரும் அ.ம.மு.க.வினர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் அமைச்சர்கள், அ.ம.மு.க.வை ஏற்பது குறித்து இன்னும் முடிவிற்கு வரவில்லை என்றே தெரிகிறது.

Views: - 9

0

0