சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா..? நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!!

12 December 2020, 12:13 pm
vijayakanth-updatenews360
Quick Share

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் 4 மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக – திமுக கட்சிகளுக்கு நேரடி போட்டி நிலவும் என்பதே உண்மையான நிலவரமாகும். ஆனால், இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்போகும் கட்சிகள் எவையெவை என்பதுதான் தற்போது புரியாத புதிராக இருக்கிறது. இப்படியிருக்க, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் நிலைப்பாடுதான் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

விஜயகாந்தை முதலமைச்சராக்குவோம் என்ற முழக்கத்துடன் பிரேமலதா விஜயகாந்த், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கும் ரஜினிகாந்தை மனதில் வைத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர்வதா? அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்தும் கருத்துகளை கேட்க உள்ளார்.

Views: - 1

0

0