கமலுடன் கைகோர்த்து தமிழக அரசியலில் களமிறங்கும் ஒவைசி..? வாக்குகள் சிதறும் அபாயம்..!!

14 December 2020, 4:50 pm
kamal - owaisi 1- updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசியலில் களமிறங்குவது தொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஒவைசி ஆலோசனை நடத்துகிறார்.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஐஎம்ஐஎம் எனப்படும் அகில இந்திய மஜ்லிஸ் – இ- இத்தாதுல் முஸ்லீம் கட்சியின் தலைவராக அசாதுதீன் ஒவைசி இருந்து வருகிறார். தெலுங்கானாவில் முக்கிய மாநில கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஏஐஎம்ஐஎம் கட்சியை, நாடு முழுவதும் கட்சியை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டார். அதன்படி, மகாராஷ்டிரா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, பீகார் சட்டப்பேரவை தேர்தலில், தேஜஸ்வியின் வெற்றியையும் தட்டிப் பறித்ததோடு, சில தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேபோல, ஐதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2வது இடத்தை பிடித்தார்.

owaisi_rally_updatenews360

இப்படி, அடுத்தடுத்த வெற்றிகளால், மக்களிடம் தங்கள் கட்சிக்கு வரவேற்பு இருப்பதாக உணர்ந்த ஒவைசி, இன்னும் 5 மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்று, தமிழகத்திலும் கால்பதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, ஐதராபாத்திற்கு தமிழக ஏஐஎம்ஐஎம் கட்சி நிர்வாகிகளை அழைத்துள்ள அவர், இரு தினங்கள் அவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் அதிகபட்சமாக 25வது தொகுதிகளிலாவது போட்டியிடுவது குறித்தும், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

kamal chennai - - updatenews360

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திருச்சியில் அடுத்த மாதம் 17ம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதைத் தொடர்ந்து, சென்னையில் மாநாட்டை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகும் முடிவில் இருப்பதால், பட்டியலின மக்களின் வாக்குகள் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவைசியின் வருகையில் இருக்கும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

stalin campaign - updatenews360

தமிழகத்தில் ஒவைசி போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது என்பது உண்மையான ஒன்றாக இருந்தாலும் கூட, வாக்குகளை பிரிக்கும் அதீத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கட்சியும், பெரும்பாலான சிறுபான்மையினர் வாக்கு வங்கியாக வைத்துள்ள திமுகவிற்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

Views: - 3

0

0