சட்டசபை தேர்தல் 2021 : முடங்கும் ஸ்டாலின்..! முன்னேறும் எடப்பாடியார்…!

31 August 2020, 7:36 pm
EPS - stalin - updatenews360
Quick Share

திமுகவின் தலைவர் ஸ்டாலின் ரகுமான்கான் இரங்கல் உரையில் “திமுகவிற்கு இடி, மின்னல், மழை தேவைப் படுகிறது” என்று கூறினார். அதன் உண்மையான அர்த்தம் அப்போது யாருக்கும் புரியவில்லை.

அப்போது எல்லோரும் என்ன யூகித்தார்கள் என்றால், அக்காலத்தில் திமுகவில் இருந்த பவர்ஃபுல் பேச்சாளர்கள் இப்போது இல்லை என்பதால், அம்மாதிரி பேச்சாளர்கள் கழகத்திற்கு தற்போது தேவை என்கிற பொருளில்தான் ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்றே கருதினார்கள்.

அதுவும் குறிப்பாக எம்ஜிஆரையே மிரள வைத்த முப்பெரும் பேச்சாளர்கள் (துரைமுருகன், ரகுமான்கான், க.சுப்பு) பட்டியலில் உள்ள ரகுமான்கானின் மரணத்தையொட்டி ஸ்டாலின் பேசியதால் அவர் இடி, மின்னல், மழை போன்ற பேச்சாளர்களையே குறிப்பிடுவதாக அவர்கள் எண்ணியது நியாயம்தான்.

ஏனெனில் திமுக என்பது சொற்பொழிவாளர்களால் கட்டப்பட்ட சொர்க்க மாளிகை. அது கல் மாளிகை அல்ல; சொல் மாளிகை!
மேடைப் பேச்சினாலேயே காங்கிரசிற்குப்
பாடை கட்டிய கட்சியல்லவா திமுக!

ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிர்பாராத இடி, அவர் உறவினர் மாறன் குடும்பப் பத்திரிகையான தினகரன் மூலமே இடித்தது. அந்த இடியோசை ஸ்டாலினை மிரள வைத்தது, புரள வைத்தது. அது என்ன?

அது ஒரு விளம்பரம் தமிழ்நாடு மாணவர் முன்னேற்ற அமைப்பு எனும் ஒரு தனிப்பட்ட அமைப்பு கொடுத்த முழுப் பக்க விளம்பரம். ஏதோ நன்றி அறிவிப்பு விளம்பரம்.

என்ன நன்றி அறிவிப்பு?

எடப்பாடியார் படத்தைப் பெரிதாகப் போட்டு, அவரை லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருப்பது போல் சித்தரித்து, அதிலே
“மாணவர்களின் மனிதக் கடவுளே எங்கள் ஒட்டு உங்களுக்கே” என்கிற வார்த்தைகளைப் பெரிதாகப் பொறித்து வெளியிடப் பட்ட நன்றி அறிவிப்பு விளம்பரம்தான் அது.

இந்த எடப்பாடியார் புகழ்பாடும் விளம்பரத்தை தினகரன் வெளியிடும் காரணம் என்ன?

தினகரன் என்ன, ஏதோ வேற்றுலக நபர்கள் நடத்தும் வெற்றுப் பேப்பரா?
மாற்றுக் கட்சியினர் நடத்தும் மலிவுப் பத்திரிகையா?

அந்த தினகரன் பேப்பரின் உரிமையாளர் திமுக கட்சிக்காரர், கட்சியின் மூலமாய் எம்பி ஆனவர், மத்திய அமைச்சர் பதவி வகித்தவர், கடுமையான வழக்குகளில் இருந்து கட்சித் தலைவரால் காப்பாற்றப்பட்டவர். கடைக்கோடி நபரல்ல, கட்சித் தலைவரின் நெருங்கிய உறவினர்! கட்சித் தலைவருக்குப் பல்வேறு தொழில்களில் பங்குதாரர்!

அவர் பத்திரிகையிலா இப்படி?
ஸ்டாலினுக்கு ஏனிந்தப் பேரிடி?

ஸ்டாலின் இடி, மின்னல் தேவை என்று கூறியது உண்மைதான். அந்த இடியும் மின்னலும் இந்த ரூபத்திலா வரவேண்டும்?

இப்படி ஸ்டாலின் இடிந்து போயிருக்கிறார் என்றால் அங்கே எடப்பாடியார் குளிர்ந்து போயிருக்கிறார்.

ஏனென்றால், 1967 தேர்தலுக்குப் பின்னர் மாணவர்களின் பங்களிப்பு அரசியலில் அறவே இல்லை. அத்தோடு சரி, அந்த எலக்ஷனுக்குப் பிறகு மாணவர்கள் எந்தக் குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. அதுவும் ஐடி கலாச்சாரம் நுழைந்தபின்பு மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் அடியோடு அற்றுப் போய்விட்டது.

EPS - updatenews360

இந்த நிலையில்தான் கொரோனா நோய் பரவியது. கல்லூரிகள், பள்ளிகள் எப்போது திறக்கும், தேர்வுகள் எப்போது நடக்கும். ஆகஸ்ட் /செப்டம்பரில் நடக்கவேண்டிய அரியர்ஸ் தேர்வுகள் எப்போது நடக்கும் என்கிற குழப்ப நிலையிலே எடப்பாடியார் ஒரு தெளிவான முடிவை எடுத்தார்.

“அரியர்ஸ் தேர்வுக்குப் பணம் கட்டிய அனைவரையும் அந்தந்த சப்ஜெக்டுகளில் ஆல் பாஸ்” என்று அறிவித்தார்.

அவ்வளவுதான், ஒட்டுமொத்த மாணவர்களின் உள்ளத்தையும் ஒரேயொரு உத்தரவு மூலம் கொள்ளை கொண்டு விட்டார் எடப்பாடியார். மாணவ சமுதாயம் மகிழ்ந்து போனது, நெகிழ்ந்து போனது, எடப்பாடியாரைப் புகழ்ந்து போற்றியது.

எடப்பாடியாரைப் போற்றி சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பத்திரிகை விளம்பரங்கள்…. என்று தூள் கிளப்பி விட்டது மாணவர் சமூகம்.

உண்மையில், எடப்பாடியார் மீது விசுவாசமுள்ள அ.தி.மு.க.காரர்களை போன்றே மாணவர்கள் அணியினரும் மாறிவிட்ட நிலைதான் உணரப்பட்டது. ஸ்டாலின் சொன்ன “இடி, மின்னல், மழை வொர்க் அவுட் ஆகிவிட்டது.

இடியும் மின்னலும் ஸ்டாலினுக்கு. புகழ் மழை பொழிந்தது எடப்பாடியாருக்கு…

Views: - 15

0

0