மே 2-ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியீடு தாமதமாகும் : தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

20 April 2021, 1:20 pm
Satyabrata Sahoo - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதமாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் கடந்த தேர்தலில் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக, வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், 88,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. அதிக வாக்குச்சாவடிகள் என்பதால், வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும். எனவே, அதிகாரப்பூா்வமாக முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, எனக் கூறினார்.

Views: - 107

0

0