முன்கூட்டியே நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல்..? பள்ளி பொதுத் தேர்வுகளை முன்னிட்டு முன்கூட்டியே நடத்த வாய்ப்பு..!

14 January 2021, 1:08 pm
ELECTION_COMMISSION_UpdateNews360
Quick Share

 இந்தியாவில் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் பல மாநிலங்களில் திட்டமிடப்பட்டுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தி முடிக்க, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வழக்கமாக மார்ச் மாதங்களில் பள்ளிகளில் பொதுத் தேர்வு நடக்கும் சூழ்நிலையில், இந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் இதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திறக்கப்படவில்லை.

இதனால் வழக்கமாக மார்ச் மாதத்தில் நடக்கும் பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு திட்டமிட்ட வழக்கமான சமயத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்இ உள்ளிட்ட பல கல்வி வாரியங்களும் 10 மற்றும் 12’ஆம் வகுப்புகளுக்கு கால தாமதமாக தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன.

இதனால், மாணவர்களின் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, பொதுத் தேர்தல்களை வழக்கமாக நடக்கும் ஏப்ரல்-மே மாதங்களுக்கு பதிலாக சில வாரங்கள் முக்கூட்டியே நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து சட்டசபைத் தேர்தல்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் பிப்ரவரி மத்தியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.

Views: - 14

0

0