உங்கள் தொகுதி எங்கள் பார்வை : பூவிருந்தவல்லி (தனி) யார் பக்கம்?

1 March 2021, 11:57 am
assembly - updatenews360
Quick Share

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 17 கிமீ-யில் இந்த தொகுதி அமைந்துள்ளது .

சென்னை நகரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மல்லி உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. வளர்ந்து வரும் தமிழில் மண்டலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், மதுபான ஆலைகள், குளிர்பான ஆலைகள் இங்கு உள்ளன. பிரசித்தி பெற்ற வைதீஸ்வரன் கோயில், ஏகாம்பர பெருமாள் கோயில் இங்கு உள்ளன.

விவசாயம் பிரதான தொழில். தற்சமயம் ரியல் எஸ்டேட் இங்கு வளர்ந்து வருகிறது. ஈக்காடு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளும் பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகள் இந்த தொகுதியை சேர்ந்தவை.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதம் இங்கு வசித்தாலும் பரவலாக அனைத்து சமுதாய மக்களும் வாழ்கின்றனர். 387 வாக்குசாவடிகளில் 3லட்சத்தி ஐம்பதாயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தொகுதியில் பெரும்பாலும் அஇஅதிமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி வருவதால், அந்த கட்சி நின்றால் ஜனங்கள் ஆர்வத்துடன் இலையில் முத்திரை பதிக்கலாம்.

தற்போது இரண்டாவது முறையாக இடைத்தேர்தலில் தொகுதியை கைப்பற்றிய திமுக மீண்டும் உதயசூரியனை வெற்றி நடைபோட வைக்க கிருஷ்ணசாமி எம்எல்ஏ கடுமையாக பாடுபடுவதாக கேள்வி.

இதனால் தொகுதியில் தேர்தல் சுவாரஸ்யமாக காட்சிகளை வேகமாக அரங்கேற்றி கட்சிகளை களைப்படைய வைக்கிறது.

Views: - 16

0

0