ரூ.6.50 லட்சம் சொத்துவரி விதிப்புக்கு எதிரான வழக்கு : நடிகர் ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

By: Babu
14 October 2020, 12:22 pm
Quick Share

ராகவேந்திரா மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரஜினிகாந்த் திரும்ப பெற்றார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு பரவத் தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 8வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, ரூ.6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Chennai High Court - Updatenews360

அந்த மனுவில், கொரோனா சமயத்தில் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்த காரணத்தினால், சென்னை மாநகராட்சி விதித்துள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன்..? என்று ரஜினிக்கு கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி நடிகர் ரஜினிகாந்த் தரப்பினருக்கு கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கை ரஜினி தரப்பினர் வாபஸ் பெற்றனர்.

Views: - 39

0

0