உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைன் இளவரசர் காலமானார் : 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!!

11 November 2020, 5:01 pm
bahrain pm - updatenews360
Quick Share

உலகிலேயே அதிக காலம் ஆட்சியில் இருந்தவரும், பிரதமராக பதவி வகித்தவருமான பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானதையடுத்து, பஹ்ரைனில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்பட இருக்கிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகின்றன. மேலும், 3 நாட்களுக்கு அரசாங்க அமைச்சகங்கள், துறைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அவரது உடல் அமெரிக்காவில் சொந்த நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடைபெற இருக்கின்றன. கொரோனா பரவல் காலம் என்பதால், பிரதமரின் இறுதிச் சடங்கில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

உலகிலேயே அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்னும் பெருமையை பெற்ற கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில் பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0