சிறந்த மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி தேர்வு : சிறந்த நகராட்சிகளும், பேரூராட்சிகளும் தேர்வு
Author: Babu Lakshmanan11 August 2021, 1:35 pm
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சிறந்த நகராட்சிகளாக நீலகிரியின் உதகை, நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு, தேனியின் சின்னமனூர் தேர்வாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தின் கல்லக்குடி, கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் கோட்டையூரும் சிறந்த 3 பேரூராட்சிகளாகவும் தேர்வாகியுள்ளன.
சுதந்திர தினத்தன்று நடக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார். அப்போது, தஞ்சை மாநகராட்சிக்கு விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத் தொகையும், சிறந்த நகராட்சிகளில் முதலிடம் பிடித்த உதகைக்கு விருதுடன் ரூ.15 லட்சமும், 2வது இடம் பிடித்த திருச்செங்கோட்டுக்கு ரூ.10 லட்சமும், 3வது இடம் பிடித்த சின்னமனூருக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
0
0