அண்ணாமலையின் உயிரைக் குறிவைத்த விரோதிகள்… ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி அதிரடி..!!

4 February 2021, 6:02 pm
Bjp Annamalai - Updatenews360
Quick Share

சென்னை : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக மாநில துணைத் தலைவருமான அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி டெல்லி சென்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. இதையடுத்து, அவரை தமிழக பாஜக துணை தலைவராக மேலிடம் நியமனம் செய்தது. அதுமுதல் தற்போது வரை பாஜகவின் முக்கிய தலைவராகவே அண்ணாமலை இருந்து வருகிறார். செய்தியாளர்களின் கேள்விக்கு நிதானமாக பதில்களை அளித்து வருவதால், பெரிதும் கவரப்பட்டவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி அண்ணாமலையின் உயிருக்கு மாவோயிஸ்ட்கள் மற்றும் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக புலனாய்வு பிரிவுனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் தங்கியுள்ள இடத்தில் 5 போலீசாரும், அவர் செல்லும் இடங்களுக்கு 2 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சாதாரண சீருடையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 26

0

0