திமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

12 June 2021, 8:24 pm
stalin - l murugan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், அண்மையில் ஊடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதியளித்துள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பத்தில் தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்..? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்த போது, அதிமுக அரசு டாஸ்மாக் கடையை திறப்பதாக வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.

Views: - 207

2

0