திமுகவுக்கு இருளை கொடுத்து ஆயிரம் விளக்கில் ஜொலிப்பாரா குஷ்பு.. புதுப்புது யுக்தியுடன் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு…!!!

4 April 2021, 6:54 pm
kushbu - updatenews360
Quick Share

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில்
போட்டியிடும் நடிகை குஷ்பு தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை 7 மணியுடன் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, ஒவ்வொரு வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல், வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுகவின் கோட்டையாக இருக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு களமிறங்கியுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, தொகுதியில் பம்பரமாக சுழன்று வருகிறார். அவருக்கு ஆதரவாக அவரது கணவர் சுந்தர்.சி.யும் வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து ஓட்டு கேட்டு வருகிறார். முதலில் திறந்த வெளியில் ஜீப்பில் பிரச்சாரம் செய்து வந்த அவர், பின்னர், மக்களோடு மக்களாக வீதியில் இறங்கி ஆதரவு திரட்டினார்.

அவரின் இந்த செயல் அங்குள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அவரும், பெண்களிடம், குழந்தைகளிடம், முதியவர்களிடம் பாகுபாடின்றி நெருக்கத்தை காட்டி வந்தார். மேலும், கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். அதிலும், குறிப்பாக, ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வது, இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இருந்தவாறே சுய தொழில் செய்ய கடனுதவி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளார்.

kushbu - updatenews360

இந்த நிலையில், இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். திறந்த வெளி வேனில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதி முழுக்க சுற்றி வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆயிரம் விளக்கு தொகுதியில் சுற்றி வந்த குஷ்புவின் வெற்றிக்கு அவரது புதுப்புது யுக்திகள்தான் கைகொடுக்க முடியும்.

Views: - 23

0

0