தேர்தலில் போட்டியிட விரும்பாத பாஜக வேட்பாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.. தமிழக காங்., தலைவர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 10:58 am
Selvaperunthagai
Quick Share

தேர்தலில் போட்டியிட விரும்பாத பாஜக வேட்பாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.. தமிழக காங்., தலைவர் விமர்சனம்!

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு 27 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டும் ஒரு பைசா கூட நிதி அளிக்காத பாஜகவை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும் நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இண்டியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறிய அவர்..

ஹபோதைப் பொருட்கள் மத்திய அரசின் உளவுத்துறை போன்ற துறைகளில் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு பாஜக தான் காரணம்.

பாஜக எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உயரும் என்றது, ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் வர வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை.

ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகத்திற்கு உள்ள நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன். ஊழலில் தளைத்துள்ள பாஜகவினர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி. எனவே பாஜக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Views: - 151

0

0