#Gobackmodi-க்கு போட்டியாக உருவெடுக்கும் ‘ஐந்து கட்சி அமாவாசை’ : திமுகவை ஓட விட்டு அடிக்கும் அண்ணாமலை!! (வீடியோ)

17 November 2020, 4:30 pm
annamalai - senthil balaji - updatenews360
Quick Share

கரூரில் Gobackmodi என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒட்டிய திமுகவிற்கு பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை கடும் எச்சரிக்கை விடுத்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவிற்கு கடும் தலைவலியை ஏற்படுத்துவது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆகும். பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது, சமூக வலைதளத்தில் #Gobackmodi என்னும் ஹேஸ்டேக்கை எதிர்கட்சிகள் டிரெண்ட் செய்தன. அதோடு, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு நிற பலூனை பறக்க விட்டும் எதிர்ப்பை காட்டின. அந்த நாள் முதல் தற்போது வரை, பாஜகவின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், Gobackmodi என்னும் வாசகத்தை திமுக உள்ளிட்ட கட்சியினர் கையில் எடுக்கின்றனர்.

Vel Yatra ADMK - Updatenews360

இதனிடையே, கூட்டணி மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக வரும் 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வர இருக்கிறார். அதேவேளையில், வரும் 24ம் தேதி கரூரில் பாஜக சார்பில் வேல்யாத்திரையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், கரூர் மாவட்டத்தில் Gobackmodi என்னும் வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் திமுகவினரால் ஒட்டப்பட்டுள்ளது. இது பாஜகவினருக்கு கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாஜக எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டிய திமுகவினருக்கு சவால் விடுக்கும் விதமாக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அப்போது, இதுவரை 5 கட்சிகளில் தாவி, தற்போது எம்எல்ஏவாக இருக்கும் செந்தில்பாலாஜியை ‘ஐந்து கட்சி அமாவாசை’ என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் சுடலை என்று அழைப்பதை சுட்டிக் காட்டி ‘சுடலை ராஜா’ எனவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- 5 கட்சிகளில் இருந்து மாறி வந்த தலைவர் ஒருவர், கரூரில் Goback modi என்னும் வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இது தொடர்பாக நமது மாவட்ட தலைவர் போலீஸில் புகார் கொடுத்தால், ‘தமிழ்நாடுடா’ என தமிழை வளர்த்தவர்கள் பேசுவதா..? ஒருவாரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் உள்ள Gobackmodi என்னும் வாசகத்தை திமுகவினர் அழிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் பிரஸ்ஸை கையில் எடுப்போம். அதனை அழிப்போம்.

அதோடு, பாஜக சார்பில் ஒட்டப்படும் சுவர் விளம்பரங்களில்,’ஐந்து கட்சி அமாவாசை மற்றும் சுடலை ராஜா’ என்னும் பெயர்கள் இடம்பெறும். எங்களின் மோடிக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்காதவர்கள் கரூரில் அரசியல் செய்ய முடியாது. நேர்மையான அரசியலை செய்யுங்கள். நேருக்கு நேர் சண்டை போடலாம், மக்களிடம் பேசலாம். அவர்கள் நம்மளை தேர்ந்தெடுக்கட்டும். எந்தக் கட்சியிடம் நல்ல கொள்கையும், ஆளுமையும் இருக்கிறது என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும்.

திருட்டுத் தனமாக சேர்த்து வைத்த பணத்தை வைத்து போஸ்டர் ஒட்டியதை, 23ம் தேதிக்குள் அழிக்க வேண்டும். இல்லையெனில்,24ம் தேதி முதல் பெயிண்ட், முதல் பிரஸ் என்னுடையதாக இருக்கும். நீங்க செய்த சாதனையை வைத்து ஓட்டு கேளுங்கள், பிச்சை எடுக்காதீங்க, என காரசாரமாக பேசினார்.

இவ்வாறு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசியது திமுகவினருக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், பிரஸ்ஸை கையில் எடுக்கப்போவது திமுகவினரா..? இல்லை பாஜகவினரா…? என்று.

1 thought on “#Gobackmodi-க்கு போட்டியாக உருவெடுக்கும் ‘ஐந்து கட்சி அமாவாசை’ : திமுகவை ஓட விட்டு அடிக்கும் அண்ணாமலை!! (வீடியோ)

Comments are closed.