தெறிக்கவிட்ட அண்ணாமலை… தலைதெரிக்க ஓடிய ஐந்து கட்சி அமாவாசை..!! கரூரில் #Gobackmodi வாசகம் அழிப்பு

18 November 2020, 5:20 pm
annamalai - senthil balaji - updatenews360
Quick Share

கரூர் : பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலையின் எச்சரிக்கையை தொடர்ந்து, திமுகவினர் எழுதிய வாசகங்களை அவர்களே அழித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இப்படியிருக்க கூட்டணி மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக வரும் 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வர இருக்கிறார். அதேவேளையில், தடைகளை தாண்டி பாஜகவின் வேல்யாத்திரையும் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 24ம் தேதி கரூரில் பாஜக சார்பில் வேல்யாத்திரையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கரூர் மாவட்டத்தில் Gobackmodi என்னும் வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் திமுகவினரால் ஒட்டப்பட்டுள்ளது. இது பாஜகவினருக்கு கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, Gobackmodi என்னும் வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்களை ஒருவாரத்தில் திமுகவினரே அழிக்க வேண்டும் என்றும், இல்லையேல், நாங்கள் அதனை அழிப்போம் என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். மேலும், பாஜக சார்பில் ஒட்டப்படும் சுவர் விளம்பரங்களில், ’ஐந்து கட்சி அமாவாசை மற்றும் சுடலை ராஜா’ என்னும் பெயர்கள் இடம்பெறும் என்றும், நீங்க செய்த சாதனையை வைத்து ஓட்டு கேளுங்கள், பிச்சை எடுக்காதீங்க என்று 5 கட்சிகளுக்கு தாவி, தற்போது திமுகவில் இருக்கும் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு வார்னிங் கொடுத்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை எச்சரிக்கை விடுத்த 48 மணிநேரத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து எழுதப்பட்ட விளம்பர வாசகங்களை திமுகவினர் அழித்தனர்.

ஏற்கனவே, பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகக் கூறி வரும் அக்கட்சியினர், தற்போதைய செயல் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கின்றனர்.

1 thought on “தெறிக்கவிட்ட அண்ணாமலை… தலைதெரிக்க ஓடிய ஐந்து கட்சி அமாவாசை..!! கரூரில் #Gobackmodi வாசகம் அழிப்பு

Comments are closed.