அண்ணா மீது சத்தியம் செய்தீர்களே… இப்ப என்னாச்சு : சித்தார்த் விவகாரத்தில் CM ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
10 January 2022, 2:40 pm
Quick Share

அண்மையில் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, பாதியிலேயே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். விவசாயிகள் சிலர் அவர் செல்லும் பாதையை மறித்து போராட்டம் நடத்தியதுடன், பிரதமரை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் கசிந்தது.

பிரதமர் மோடி செல்லும் பாதை அம்மாநில முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், எப்படி போராட்டக்காரர்களுக்கு தெரிய வந்தது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆளும் பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு பெரும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருவதுடன், WeStandwithmodi என்னும் ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தன் பங்கிற்கு கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதாவது, பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது என்று பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு நடிகர் சித்தார்த் ஆபாசமான வார்த்தைகளால் பதில் அளித்திருந்தார். அவரது பதிவுக்கு டுவிட்டரில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராமன், பெண்ணை இழிவாகப் பேசிய நடிகர் சித்தார்த்தை கைது செய்யுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இது போன்ற கேவலமான ட்வீட்கள் குறிப்பாக ஒரு நடிகரிடமிருந்து வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அவரது வரவிருக்கும் திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழ்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன்.

முதல்வர் ஸ்டாலின் இந்த ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பு என்பது நகைச்சுவை அல்ல. இதை நடிகர் சங்கமும் கண்டிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய பிராண்டுகள் கூட இதை கண்டிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.

gayathri raguram - stalin - updatenews360

அல்லது அப்படிப்பட்டவர்களை திமுக பாதுகாத்து ஊக்கப்படுத்துகிறது என்றால். இதை திமுக நோக்கமாகவும் பார்க்கிறேன். பிரதமரின் பாதுகாப்பு குறித்து மூன்றாவது நபரை கூற வைப்பது. இதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும்.. இதுபோன்ற ட்வீட்களுக்கு திமுக பொறுப்பேற்கப்படும். தெலுங்குத் துறையும், தமிழ் துறையும் அவரது படங்களைத் தடை செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பிரபல ஆங்கில தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்த செய்தி வாசித்த பெண்ணையும் தரக்குறைவாக நடிகர் சித்தார்த் விமர்சித்திருந்தார். இதற்கும், அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, “திமுக குடும்பம் தனது சொந்த மகனைத் தவிர வேறு ஒரு வெற்றிகரமான ஹீரோவாக்குமா என்பதை சித்தார்த் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசையோ, திமுகவையோ நம்பி அவர் எங்கும் அதிகாரம் பெறப் போவதில்லை. அவர்களுக்கு முன்னால் அவர் ஒறு நகைச்சுவையாகவும் பிராமணராகவும் இருப்பார்.

“பெண்களை வாய்மொழியாக அவமானப்படுத்துவது பற்றிய மற்றொரு ட்வீட். இது ஏற்கத்தக்கது அல்ல. திமுக ஆதரவாளராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னீர்கள். மேலும் நீங்கள் அண்ணா மீது சத்தியம் செய்தீர்கள். அவர் கைது செய்யப்பட இது அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.” எனக் கூறினார்.

Views: - 433

0

1