‘எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை’ : கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் குறித்து எச்.ராஜா விமர்சனம்

Author: Babu Lakshmanan
2 January 2023, 1:17 pm
Quick Share

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிப்பதாகவும், எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை என்று கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்திற்கு பாஜக பிரமுகர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பல முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- 6/7/2021 நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும், 2000 கோயில்களை புனராவர்த்தனம் செய்வதற்கு பரிசலீப்பதாக கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கையே தமிழக அரசாங்கத்திற்கு தெரியாது.

நீதிமன்ற தீர்ப்பில் 44000 கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் 36000 கோவில் இருப்பதாக கூறுயிருக்கிறார்கள். எனக் கூறிய அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை அலேலுயா பாபு என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்து சமய அறநிலைத்துறை இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது.

முதல்வரின் மகன் மற்றும் மருமகன் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கோயில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொங்கல் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். கபாலீஸ்வரர் கோவிலில் கருணாநிதியை போற்றி என்று எழுதியவர்கள்தான் இந்த திராவிட ஸ்டாக்குகள். எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை என்று கருணாநிதி சிலையையும் போகிற போக்கில் விமர்சித்தார்.

Views: - 522

0

0