தமிழகத்திற்கு மீண்டும் ஆபத்து.. அத்துமீறி நுழைந்த ‘கஞ்சிபானி’ இம்ரான்..? அலட்சியம் காட்டும் தமிழக அரசு ; எச்சரிக்கும் அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 2:33 pm
Annamalai Vs Stalin - Updatenews360
Quick Share

கோவையில் அண்மையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சதித்திட்டம் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு மீண்டும் ஒரு அபாய எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், ஆனால் இந்த விவகாரத்திலும் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திமுக தலைமையிலான அரசின் ஆட்சியில் தமிழகம் தற்போது போதைப் பொருட்கள் மற்றும் பயங்கரவாத செயல்களின் கூடாரமாக மாறிவிட்டது. ஏற்கனவே, கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு மத்திய உளவுத்துறை முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கையை தமிழக உளவுத்துறை அலட்சியப்படுத்தியது.

தற்போது, மீண்டும் மத்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை குறித்த செய்தியை பிரபல செய்தி நிறுவனம் வெளிக்கொண்டுள்ளது. அதாவது, இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமது இம்ரான், இந்தியாவிற்குள் ஊடுவியதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காமல், கடந்த முறை போன்ற இப்போதும் மெத்தனமாக இருந்து வருகிறது. எதிர்பாராதவிதமாக, தமிழக மக்கள் தேர்தலில் தகுதியில்லாத திமுகவை வெற்றி பெறச் செய்து விட்டார்கள். இதனால், தமிழகத்திற்கு அடுத்தடுத்து பேரிடர் ஏற்பட்டு வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 458

1

0