விவசாயி கெட்டப்பில் அண்ணாமலை… மாட்டு வண்டியில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்..!!

Author: Babu Lakshmanan
5 August 2021, 12:18 pm
annamalai - updatenews360
Quick Share

மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதல் தற்போதைய முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை வரை மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழக பாஜகவும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது.

அண்மையில் மேகதாது அணையை கட்டும் கர்நாடகா அரசின் முடிவை கண்டித்து ஆக.,5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை வழங்காத நிலையில், இன்று தஞ்சையில் அறிவித்தபடி பாஜக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. பச்சைத் துண்டை அணிந்து கொண்டு மாட்டு வண்டியில் தொண்டர்களின் புடைசூழ, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தப் போராட்டத்தில் பாஜகவினர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 373

0

0