ரூட்டு கிளியர்… ம.பி.யில் இருந்து மேல்சபைக்கு தேர்வாகும் எல்.முருகன்… அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்..!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 12:06 pm
l murugan - updatenews360
Quick Share

மத்திய இணையமைச்சராக இருக்கும் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

யாரும் எதிர்பார்க்காத நிலையில், தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்தது மேலிட பாஜக. கட்சியின் முக்கியத் தலைவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் ஏற்றாற் போல செயல்பட்டார். சட்டப்பேரவை தேர்தலில், தனது கட்சி வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக அறிவித்தார். அதோடு, எல்.முருகனின் செயல்படுகளால், இந்தத் தேர்தலில் 4 உறுப்பினர்களை பெற்றது.

தமிழகத்தில் பாஜகவுக்கு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த எல்.முருகனை, மத்திய இணையமைச்சராக்கி டெல்லி மேலிட பாஜக கவுரவித்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகனை பாஜக அறிவித்துள்ளது. ம.பி.யில் பாஜகவுக்கு போதுமான பலம் இருப்பதால், அக்.,4ம் தேதி நடக்கும் தேர்தலில், எல்.முருகன் எம்பியாக தேர்வு செய்யப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Views: - 274

0

0