ஆஸ்கர் விருதாக மாறிய ஆட்டுக்குட்டி… திமுகவினருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
5 October 2021, 2:10 pm
annamalai - stalin - updatenews360
Quick Share

பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியைப் பரிசாக அளித்தபோது ஆஸ்கர் விருதுபோல மகிழ்ச்சி அடைவதாக அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கர்நாடகாவில் எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்தார். பெங்களூர் நகர துணை ஆணையராகப் பணியாற்றும்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். சிறப்பாக பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர், திடீரென பணியில் இருந்து விலகியது பெரும் பேசு பொருளாக இருந்தது.

annamalai - Updatenews360

மக்கள் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறிய நிலையில், சொந்த ஊரிலேயே விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, ஆட்டுக்குட்டியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

இந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் பாஜகவில் இணைந்தார். துணைத் தலைவராக பொறுப்பேற்ற அவர் மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கு பதிலடியாக, திமுகவினர் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியைப் பரிசாக அளித்தபோது ஆஸ்கர் விருதுபோல மகிழ்ச்சி அடைவதாக அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகளை அவர் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது, அவருக்கு பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட அவர், ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கியது, ஆஸ்கர் விருதை வழங்கியது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

Image

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சென்னிமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பரிசாகத் தந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சி. அதிலும் கொங்கு மண்டலத்தின் வேளாண் சின்னமாக, நம் பண்பாட்டின் விழுமியமாக நான் ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறேன்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாஜகவினர் கூறுகையில், “விவசாயி ஒருவர் பாஜகவின் உயர்ந்த பதவியை வகிக்க முடியும் என்பதற்கு அண்ணாமலையும் ஒரு சான்று. ஆனால், விவசாயியான அண்ணாமலை ஆட்டுக்குட்டியை வைத்திருக்கும் புகைப்படத்தை வைத்து, அவரை திமுகவினர் கிண்டல் செய்து வருகின்றனர். திமுகவில் சாதாரண தொண்டன் கடைசி வரைக்கும் சாதாரண தொண்டனாகவே தான் இருக்க முடியும். போலி விவசாயியாக நடிப்பவர்களுக்கு எல்லாம் விவசாயிகளின் அருமை தெரியாது. அரசியல் மட்டுமே செய்ய தெரியும்.

அண்ணாமலையை பற்றி பேசுவதற்கு திமுவினருக்கு தகுதி கிடையாது என்பதை உணர்த்தவே, ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினோம். திமுகவினருக்கு பதிலடி கொடுக்கவே, ஆட்டுக்குட்டியையும், ஆஸ்கர் விருதையும் எங்கள் தலைவர் ஒப்பிட்டுள்ளார்,” என்கின்றனர்.

Views: - 614

0

0