அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை… என் அம்மாவை பார்த்து 2 மாதம் ஆச்சு ; அண்ணாமலை உருக்கம்…!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 2:58 pm
Quick Share

ஆனைமலை நல்லாறு திட்டம், தென்னை விவசாயிகளின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் சண்டையிட்டு பெற்றுத் தர வலிமையான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டதும் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது, தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தேர்தலில் நானே களத்தில் இறக்கப்பட்டிருப்பதாகவும், 400 எம்பிக்களை நாம் வெற்றி பெற வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குவதற்கு அல்ல, இந்தியாவின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக என்று பேசினார்.

தொடர்ந்து, ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த இங்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற வேட்பாளர் குரல் கொடுக்க வேண்டும் என்றும், 10 ஆயிரம் கோடி வேண்டும் என்றால் அதனை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெறும் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக என்றும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமாராக அமர்வார் என தெரிந்து நடக்கும் தேர்தல் இது எனக் கூறினார்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி வேண்டும் என்றும், அந்த திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து எந்த வேட்பாளரால் பெற்று தர முடியும் என்பதை யோசித்து பாருங்கள் எனக் கூறிய அண்ணாமலை, கோவையில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டதாகவும், உங்கள் தொகுதி பிரச்சனைகளை மேலே கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை என்றும், குறைந்த பட்சம் நான் சொல்லக் கூடியதை அவர்கள் கேட்டு அதன் பிறகு அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டியதை செய்ய வைப்பது என் கடமை என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர், வட அமெரிக்காவில் மக்கா சோளம் விலை குறைவு, எனவே வட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வரியை குறைத்தால் விலை குறைவாகும் இது போன்றதை புரிந்து கொள்ள ஒரு நபர் வேண்டும், மத்திய பிரதேஷத்தில் இருந்து வந்தால் இன்னும் குறைவாகவே கிடைக்கும். இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒருவர் தேவை, விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இந்தியாவின் பரிமாண தன்மையை மாற்ற 400 எம். பி க்கள் வேண்டும்.

கரூர் – கோவை 6 வழிச்சாலை கொண்டு வர வேண்டும், கேஸ் என்பது பைப் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் பாஜக எம்.பிக்கள் இல்லாததால் வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் நமக்கு கிடைத்துள்ளது. மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை. பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது. கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வி கேட்பதில்லை. இதனால மோடியின் வீடு திட்டத்தில் எதுவும் இல்லை. தற்போதுள்ள எம்.பியை யாருமே பார்த்ததில்லை.

ஆனால் அண்ணாமலையை மாநில தலைவராக எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள். அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை. என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது. நான் தெளிவாக உள்ளேன். இப்போது மாற்றம் இல்லை என்றால் எப்போதும் இல்லை. என்பதற்காக உழைத்து கொன்டிருக்கிறேன். அமைச்சர் டிஆர்பி ராஜா பணத்தோடு களத்தில் நிற்கிறார்.

இது உங்களுடைய தேர்தல். 18 நாளில் நடைபெறவுள்ள தேர்தல், 19 பேர் பாஜகவில் போட்டியிடுகிறார்கள் . 40 தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், என்னை சந்திக்கவில்லை என எதிர் பார்க்காமல், நீங்களே அண்ணாமலையாக, மோடியாக எண்ணி பிரச்சாரம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நான் பார்த்து கொள்கிறேன்.

இன்னும் 5 ஆண்டுகள் உங்கள் சேவகனாக பணி செய்ய, 25 நாட்கள் எங்களுக்காக நீங்கள் பணி செய்யுங்கள். தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்று தருவேன். கோவைக்கு வேலையை செய்து கொடுப்பதற்கு வலிமையான மக்கள் பிரதிநிதி தேவை. தென்னை விவசாயிகளின் கோரிக்கை மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்படும்.

வேலம்பட்டி சுங்கச்சாவடி அகற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும். கெட்டவர்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்றால், நல்லவர்கள் பேச துவங்க வேண்டும். பாஜக ஆட்சி எதனால் வர வேன்டும் என பேச வேண்டும். உங்களுக்கும் அரசிற்கும் பாலமாய் இருப்பேன். டெக்ஸ்டைல் தொழில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாய் இருக்கிறோம், என பேசினார். இந்நிகழ்ச்சியில் கோவை மற்றும் திருப்பூர் பகுதி சேர்ந்த மாற்று கட்சியினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

Views: - 113

0

0