I.N.D.I.A. கூட்டணி எல்லாம் தேராது… NDA கூட்டணிக்கு வரப்போகும் புதிய கட்சிகள் ; வானதி சீனிவாசன் கணிப்பு.!!

Author: Babu Lakshmanan
2 September 2023, 5:02 pm
Quick Share

I.N.D.I.A. கூட்டணியை அவர்கள் தேர்தல் வரை கொண்டு செல்லட்டும் என்று பாரதிய ஜனதா தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் உமாரவிராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாரதி ஜனதா கட்சியின் தேசிய தலைவர் வானதிசீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் மகளிர் அணியை பலப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் வகையிலும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதி வாரியாக மாநாடு நடத்துவது குறித்ததான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கடுமையாக வேலை பார்ப்பதற்கு 66மாவட்டங்களில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறார். அத்திட்டங்களை மகளிர் அணியினர் வீடு வீடாகச் சென்று திட்டங்களை கொண்டு செல்ல உள்ளனர்.

கடந்த 2016 முன்னாள் கேஸ் சிலிண்டர் விலை ரூபா ஆயிரத்தை கடந்து இருந்தது பல்வேறு காலகட்டத்தில் சர்வதேச விலைக்கு ஏற்ப மத்திய அரசு விலையை குறைத்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 10கோடி ஏழை குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது அவர்கள் வாங்கும் சிலிண்டருக்கு அந்தத் திட்டத்தின் கீழ் ரூபாய் 200 மேலும் பொதுவாக ரூபாய் 200 என 400 ரூபாய் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுவாக அனைத்து பொது பயனாளிகளுக்கும் ரூபாய் 200 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் சிலிண்டருக்கு 100 ரூபாய் கொடுக்கப்படும் என அறிவித்துவிட்டு ரெண்டரை வருடத்திற்கு மேலாக கடந்தும் கொடுக்காமல் இதுகுறித்து பேசுவதற்கு எந்த அருகத்தையும் இல்லை.
அனைவருக்கும் பணம் கொடுக்கும் என்று சொல்லிவிட்டு பதுங்கிக் கொள்வதல்ல பாஜக அரசு, என தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்படும் என்ற கேள்விக்கு, “கலைக்கப்படும் என ஏன் நினைக்கிறீர்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விவாதத்தை ஆரம்பிக்கிறது. இந்த கருத்தை மக்களுக்கு முன்பாகவும் மக்கள் பிரதிநிதிக்கு முன்பாக வைக்கிறோம். இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. இப்படி புதிய சட்டத்தின் வாயிலாக விவாதிக்க உள்ளோம். இது சீர்திருத்தம் தொடர்பானது. அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகும்போது மாற்றமே கொண்டு வர கூடாது என சொல்லப்படவில்லை, என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மோடி போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- தமிழகத்தில் யார் போட்டியிடுகிறார்கள்? யார் வேட்பாளர் என்று கட்சியின் தேர்தல் குழு முடிவு எடுக்கும் தமிழகத்தில் அவர் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று கடந்த மாதம் கூட்டம் போட்டு நாங்கள் காட்டியுள்ளோம். இன்னும் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது, எனக் கூறினார்.

தமிழர் பிரதமராக வரவேண்டும் என கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, “கூட்டணியில் தமிழகத்தில் ஒருவர் வரவேண்டும் என்று சொல்லும் பொழுது திமுக என்ன செய்தது என்று வரலாறு கூறும். தற்பொழுது முதலாவது கூட்டணியை அவர்கள் தேர்தல் வரை கொண்டு செல்லட்டும் பிறகு பார்ப்போம்.

சந்திராயன்3 அனுப்பியது நம் நாட்டின் பெருமை நாம் தான் அதற்கு பெயர் வைக்க வேண்டும். இஸ்ரோவுக்கு பாரத பிரதமர் அதிகமாக நிதி வழங்கி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளார். நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் பங்கு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்திய பாரத பிரதமருக்கு அதிக பங்கு உள்ளது, என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 285

0

0