ஒருநாள் மழைக்கே திக்கு முக்காடும் சென்னை… திமுக அரசுக்கு வயிறு எரிந்து சாபம் விடும் சென்னைவாசிகள் : பாஜக கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 10:04 pm
Quick Share

கனமழையால் சென்னை தத்தளித்து வருவதை கண்டுகொள்ளாமல் மாநில உரிமை, மொழி அரசியல், சனாதன தர்மத்தை ஒழிப்போம், நீட் ஒழிப்பு என்றெல்லாம் மடைமாற்றி கொண்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு, என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மணிநேரமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இரவு 10 மணி வரை கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழையால் சென்னை தத்தளித்து வருவதை கண்டுகொள்ளாமல் மாநில உரிமை, மொழி அரசியல், சனாதன தர்மத்தை ஒழிப்போம், நீட் ஒழிப்பு என்றெல்லாம் மடைமாற்றி கொண்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு, என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இன்றைய ஒரு நாள் மழையில் திக்கு முக்காடி திணறிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். நாங்கள் யார் தெரியுமா? திராவிட மாடல் தமிழகத்தை சீரமைத்து விட்டது என்று மார்தட்டி கொண்டிருந்தவர்கள், இன்று சென்னை சீர்குலைந்து, சீரழிந்து காட்சியளிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை தெருக்களில் தண்ணீரை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தெருக்களையே பார்க்க முடியவில்லை.

மேடும், பள்ளமும், குழிகளும் பாதசாரிகளை, இரு சக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்த்து கொண்டிருக்கின்றன. மக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். இரு வருடங்களில் சாலைகளை செப்பனிடாத, புதிய சாலைகளை அமைக்காத அரசின் மெத்தனத்தை, அலட்சியத்தை மக்கள் வயிறெரிந்து சாபம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். புலம்பி கொண்டே, அச்சத்துடன் வீடு திரும்புகிறார்கள்.

மழை நீர் வடிகால்வாய் அமைத்து விட்டோம் என்று சொன்னவர்கள், பாதி சாலைகளை ஆக்கிரமித்து அவை அமைக்கப்பட்டதை கண்டும் காணாமல் விட்டதன் காரணமே இன்றைய நிலை. தெருவெங்கும் பள்ளம், எல்லாம் குழி என்ற பதைபதைப்புடன் வீடு சேர துடித்து கொண்டிருக்கிறான் சென்னைவாசி.

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மாநில உரிமை, மொழி அரசியல், சனாதன தர்மத்தை ஒழிப்போம், நீட் ஒழிப்பு என்றெல்லாம் மடைமாற்றி கொண்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு, என தெரிவித்துள்ளார்.

Views: - 140

0

0