பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு : கழற்றிவிடப்பட்ட தமிழக நிர்வாகிகள்..! எச்.ராஜாவின் பொறுப்பும் பறிப்பு..!

26 September 2020, 5:47 pm
natta - h raja - updatenews360
Quick Share

டெல்லி : பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து ஒருவரின் பெயரும் இடம்பெறாதது மாநில தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டிருந்தார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற 9 மாதங்களுக்குப் பிறகு, அவர் வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. ஏற்கனவே, தேசிய செயலாளர் பதவியில் இருந்த எச்.ராஜாவும் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த பி.எல். சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, உ.பி.யைச் சேர்ந்த ராஜேஷ் அகர்வால் பொருளாளராகவும், ம.பி,யைச் சேர்ந்த சுதிர் குப்தா துணை பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர்கள் ராமன் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சுயநலமின்றி, அர்ப்பணிப்பு உணர்வுகள் புதிய பொறுப்பாளர்கள் பணியாற்றுவார்கள் என நம்புவதாகக் கூறி, நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Views: - 8

0

0