நாளை தொடங்கவிருந்த பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு

5 November 2020, 11:55 am
Chennai High Court - Updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் நாளை முதல் தொடங்கவிருந்த பாஜகவின் வேல்யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும், முருகப்பெருமானை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரையை தமிழக பாஜக அறிவித்துள்ளது. நாளை திருத்தணியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் வழியாக திருச்செந்தூரில் டிச.,6ம் தேதி இந்த யாத்திரை முடிவடைகிறது. இந்த யாத்திரையின் தொடக்க நாளில் ஒரு லட்சம் பேரை திரட்ட பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இந்த யாத்திரை தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பாஜகவினர் நம்புகின்றனர்.

இதனிடையே, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெற்றிவேல் யாத்திரையை பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறி, இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று திமுக கூட்டணிகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் நடக்கும் இந்த யாத்திரையினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாக சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பாஜகவின் வேல்யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 26

0

0

1 thought on “நாளை தொடங்கவிருந்த பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு

Comments are closed.